பொது செய்தி

தமிழ்நாடு

உயரும் வைகை அணை நீர்மட்டம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி: வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும்
உயரும் வைகை அணை நீர்மட்டம்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசன தேவையை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல், முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட வரத்து அதிகமாக உள்ளது. இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. வரத்து 1,011 கன அடியாகவும், நீர் திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,430 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X