ஆக்சிஜன் விவகாரத்தில் இணை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: 'கோவிட் 2வது அலையின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' என, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார். இந்நிலையில் சி.பி.ஐ., - எம்.பி., பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடில்லி: 'கோவிட் 2வது அலையின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' என, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் நேற்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ., - எம்.பி., பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.



latest tamil news



அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது: ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஏராளமாக வந்தன. ஆக்சிஜன் சப்ளையைச் சீராக வழங்கக் கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றங்களில் மக்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமும் தலையிட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய உத்தரவிட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த கணக்கு இல்லை என, மத்திய அரசு தெரிவிக்கிறது.


latest tamil news


நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களை அவமானப்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவாரின் பதில் இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் உரிமை மீறல் தீர்மான நோட்டீசாக இதை எடுத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202112:01:21 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don’t repeat the comment
Rate this:
Cancel
23-ஜூலை-202112:01:16 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don’t repeat the comment
Rate this:
Cancel
23-ஜூலை-202112:01:29 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don’t repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X