தாயுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபரை எரித்து கொன்ற மகன்: போலீஸ் விசாரணை| Dinamalar

தாயுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபரை எரித்து கொன்ற மகன்: போலீஸ் விசாரணை

Added : ஜூலை 22, 2021 | |
திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு திருக்குமரன் நகரை சேர்ந்த, 30 வயது மதிக்கதக்க வாலிபர் இரு நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். மாயமான வாலிபரின் சடலம், அப்பகுதியில் உள்ள பாறைக்குழிக்குள் எரிந்த நிலையில் இருப்பது நேற்று (ஜூலை 21) தெரிந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் தாயுடன் கள்ள உறவு

திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு திருக்குமரன் நகரை சேர்ந்த, 30 வயது மதிக்கதக்க வாலிபர் இரு நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். மாயமான வாலிபரின் சடலம், அப்பகுதியில் உள்ள பாறைக்குழிக்குள் எரிந்த நிலையில் இருப்பது நேற்று (ஜூலை 21) தெரிந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் தாயுடன் கள்ள உறவு ஆகியவற்றின் காரணமாக மகன் கொலை செய்தது தெரியவந்தது. தனது தாயுடன் அந்த வாலிபர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த மகன், ஆத்திரத்தில் வாலிபரை அடித்து, பாறைக்குழிக்குள் எரித்து கொன்றது தெரிந்தது. சம்பவ இடத்தை துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் வரதராஜன் பார்வையிட்டனர். கொலை தொடர்பாக, இரண்டு பேரிடம் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X