திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் சீனா

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பீஜிங்: திபெத் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், தங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என சீனா கட்டாயப்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன ராணுவம் மற்றும் உள்ளூர் ராணுவத்தில், திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எல்லை பகுதிகளில்
china, tibet, Youths, army, சீனா, இளைஞர்கள், ராணுவம்,

பீஜிங்: திபெத் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், தங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என சீனா கட்டாயப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன ராணுவம் மற்றும் உள்ளூர் ராணுவத்தில், திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டு உள்ளது. திபெத்திய தன்னாட்சி பகுதியில் நடத்தப்படும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்களில், திபெத்திய குடும்பத்தில் ஒரு இளைஞர் ராணுவத்தில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் படிக்கும் 20 இளைஞர்கள் ராணுவ அகாடமியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமத்தினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை பற்றி அறிந்தவர்கள், ராணுவத்தின் ரோந்து பணிக்கு உதவும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக உளவுத்துறையினர் கூறி உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் திபெத் சர்ச்சைக்குரிய பகுதின்னு இந்தியா சொல்றாங்க ஆனா சீனா அங்கே புல்லட் ரயில் உடுது ஜிங் பிங் வந்து இறங்கினா ரத்னா கம்பள வரவேற்பு ஏராளமான மக்கள் கொடியசைத்து வரவேற்பு சீனா என்னெல்லாம் முன்னேற்றம் பண்ணுதுன்னு இந்தியா உன்னிப்பா கவனித்து வருகிறதாமே ஆச்சர்யாமால்ல இருக்கு
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202122:46:14 IST Report Abuse
Kasimani Baskaran அது என்ன புதிதாக திபத்திய தன்னாட்சிப்பகுதி என்று? திபெத் சீனாவின் கம்முநிஸ்ட்களின் காலடியில் குப்புற விழுந்து கிடக்கிறது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜூலை-202113:06:23 IST Report Abuse
Lion Drsekar எதிரி நாட்டினர்களின் கட்சிக்காரர்கள் , அந்நிய நாடான ஜனநாயக நாட்டில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கும்போது இது என்ன ? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X