பொது செய்தி

இந்தியா

சபரிமலை கோவில் நடை அடைப்பு: ஆக.,15ல் மீண்டும் திறப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நேற்று (ஜூலை 21) நடை அடைக்கப்பட்டது. ஆவணி மற்றும் ஓணம் பண்டிகைக்காக ஆகஸ்ட் 15ம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும், என்று திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16ம் தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ்
Sabarimala, சபரிமலை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நேற்று (ஜூலை 21) நடை அடைக்கப்பட்டது. ஆவணி மற்றும் ஓணம் பண்டிகைக்காக ஆகஸ்ட் 15ம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும், என்று திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16ம் தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. ஆடி மாத பூஜையின் நிறைவு நாளான நேற்று (ஜூலை 21) தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்தி பெற்ற கலச பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கோவில் நடை நேற்று இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் முதல் நாள் மட்டும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 நாட்களில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆகஸ்ட் 15ம் தேதி மீண்டும் திறக்கப்படும். 16ம் தேதி புத்தரிசி பூஜை நடைபெறும். 23ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X