சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் கொரோனா தடுப்பூசிக்கு மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட அரசு கலைக் கல்லூரி மற்றும் பிரீக்ஸ் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், ஓல்டு ஊட்டிக்கு 300, சர்ச் ஹில்லுக்கு 300 என, 600 கோவிஷீல்டு தடுப்பூசிக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என, மாவட்ட நிர்வாக அறிவித்தது. இன்று காலை முதல், மேற்கண்ட பகுதிகளை தவிர, ஊட்டி நகராட்சியின் பிற பகுதிகளிலிருந்து, தடுப்பூசி ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்ட
 ஊட்டியில் கொரோனா தடுப்பூசிக்கு மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு


ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட அரசு கலைக் கல்லூரி மற்றும் பிரீக்ஸ் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், ஓல்டு ஊட்டிக்கு 300, சர்ச் ஹில்லுக்கு 300 என, 600 கோவிஷீல்டு தடுப்பூசிக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என, மாவட்ட நிர்வாக அறிவித்தது. இன்று காலை முதல், மேற்கண்ட பகுதிகளை தவிர, ஊட்டி நகராட்சியின் பிற பகுதிகளிலிருந்து, தடுப்பூசி ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்ட டோக்கன் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் 500க்கு மேற்பட்ட மக்கள் கூடுதலாக அந்த மையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த சுகாதார துறையினரிடம் டோக்கன் கேட்டனர். இன்று அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. என, தெரிவித்தனர். நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, வருவாய் துறையினர், சுகாதார துறையினரை மக்கள் முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X