பொது செய்தி

தமிழ்நாடு

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஆடி மாதம் துவங்கி மழை பரவலாக பெய்து வருவதால் கால்நடைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் இன்று மாடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையானது.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு: ஆடி மாதம் துவங்கி மழை பரவலாக பெய்து வருவதால் கால்நடைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் இன்று மாடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் 2 வாரமாக சந்தை செயல்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 22) புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 50 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர்.

எருமைகள் 16 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு 22 ஆயிரம் முதல் 47 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 23 ஆயிரம் முதல் 52 ஆயிரம், சிந்து 15 ஆயிரம் முதல் 38 ஆயிரம், நாட்டுமாடு 40 ஆயிரம் முதல் 78 ஆயிரம் ரூபாய் வரை, வளர்ப்பு கன்றுகள் 6000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையானதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X