பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் கனமழை தொடரும்: மண் சரிவு ஏற்படும் என எச்சரிக்கை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில்,இன்றும், நாளையும்(ஜூலை 22, 23) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,
கோவை, நீலகிரி, கனமழை, மணிசரிவு,

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில்,


இன்றும், நாளையும்(ஜூலை 22, 23)


நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிருஇடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 12 செ.மீ., பந்தலூரில் 7 செ.மீ., கூடலூர் பஜார், நடுவட்டம் பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை


வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இதனால்,
ஜூலை22 முதல் 24 வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 22 முதல் 26 வரை, தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இதே காலகட்டத்தில், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
22-ஜூலை-202114:02:58 IST Report Abuse
HSR மும்பையில் அடிக்கடி மழை பெய்து எப்ப பார்த்தாலும் பாதிரி போல மூடுடன் அலைகிறேன்..சம்பளம் சாஸ்தியா இருந்தா நாணும் வந்துடுறேன் .எவ்வளவுன்னி கேட்டு சொல்லுங்கோ ஷாமியாயோவ்..ரொம்ப காஜியா இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X