சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொசுவை விரட்ட புகை மூட்டம்; மூச்சுத்திணறி ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சென்னை: பல்லாவரத்தை அடுத்த பம்மல், பொன்னி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி புஷ்பலட்சுமி, 55. மகள் மல்லிகா (38), பேரன் விஷால் (11) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்கள் வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால், இரவில், கொசுவை விரட்ட, புகை மூட்டம் போடுவது வழக்கம். நேற்றிரவு, 10:00 மணிக்கு, ஒரு

சென்னை: பல்லாவரத்தை அடுத்த பம்மல், பொன்னி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி புஷ்பலட்சுமி, 55. மகள் மல்லிகா (38), பேரன் விஷால் (11) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்கள் வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால், இரவில், கொசுவை விரட்ட, புகை மூட்டம் போடுவது வழக்கம். நேற்றிரவு, 10:00 மணிக்கு, ஒரு டப்பாவில் புகை மூட்டம் போட்டுவிட்டு, ‛ஏசி'யை ஆன் செய்துவிட்டு அனைவரும் துாங்கினர். காலை, 7:30 மணி ஆகியும், வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, மேல் வீட்டில் வாடகை இருக்கும் சீதா என்பவர், நீண்ட நேரம் ஆகியும், கதவு திறக்காததால் சந்தேகமடைந்து, சொக்கலிங்கத்தின் மகன் வேலுவுக்கு தகவல் தெரிவித்தார். பின், கதவை உடைத்து பார்த்தபோது, நான்கு பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக நான்கு பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சொக்கலிங்கத்தின் மனைவி புஷ்பலட்சுமி இறந்தது தெரியவந்தது.

கவலைக்கிடமான நிலையில் இருந்த சொக்கலிங்கம், அவரது மகள் மல்லிகா ஆகியோரை, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் விஷாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைகளில், மூன்று பேருக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X