எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி.,ஒத்திவைப்பு

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் பிரச்னை மற்றும் மொபைல்போன் ஓட்டு கேட்பு பிரச்னை காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின.இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த விவகாரத்தை கண்டித்து,
பார்லிமென்ட், எதிர்க்கட்சிகள், அமளி, ஒத்திவைப்பு, மொபைல்போன், ஒட்டுக்கேட்பு

புதுடில்லி: விவசாயிகள் பிரச்னை மற்றும் மொபைல்போன் ஓட்டு கேட்பு பிரச்னை காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின.

இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த விவகாரத்தை கண்டித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இன்றும், பார்லிமென்ட் இரு அவைகளும் துவங்கிய நிலையில், மொபைல் போன் ஒட்டுக்கேட்பு மற்றும் விவசாயிகள் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news




பிற்பகலில்லோக்சபா கூடிய போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா துவங்கியதும், மொபைல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து உரையை துவங்கிய போது எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202122:52:53 IST Report Abuse
Jai காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது வெளிவந்த கனிமொழி ஆடியோ ராஜாத்தியம்மாள் ஆடியோ சண்முகநாதன் ஆடியோ இதெல்லாம் எப்படி வெளியே வந்தது?
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
22-ஜூலை-202121:15:44 IST Report Abuse
A P காங்கிரஸ் கட்சி நாட்டுப் ப்ரச்சனைகளுக்குத் தீர்வு காண விழைவதாகத் தெரியவில்லை. ரவுடித்தனம் செய்வதே வேலை. தேஸத் துரோகிகள். பார்லிமெண்ட்டில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு விடை பெறுவதே நியாயம். அதை விடுத்து, பிற நாட்டுக் கைகூலிகளோ என்று எண்ணத் தோன்றும் வகையில் சபை நடக்க விடாமல் செய்வது அட்டூழியம் தவிர வேறொன்றுமில்லை. கயவாளிகள். அமளி செய்யும் இந்தத் தேசத் துரோகிகள் கடைசி காலத்தில், நன்கு புழுத்தபின் தான் கஷ்ட்டப்பட்டு சாவார்கள். நன் மக்கள் சாபம் சும்மா விடாது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஜூலை-202119:42:06 IST Report Abuse
A.George Alphonse பிஜேபிஅப்போது இதுபோன்ற அமளியி ல் ஈடுபட்டு ஆளும் கட்சியை பேச விடாம ல் பார்லியமென்ட்டை முடக்கியது.இப்பொது காங்கிரசும்,எதிர்க்கட்சிகளும் அதையே செய்கிறார்கள்.இவர்கள் மக்களின் Hard earned வரி பணத்தை விழலுக்கு இறைத்த நீ ர் போல் விரயம் செய்வது மிகவும் மன வருத்தத்தையும்,வலி யையும் தருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X