பொது செய்தி

இந்தியா

போராட்ட களத்தை மாற்றிய விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர பாதுகாப்பு

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றால், போராட்டம் சற்று ஓய்ந்திருந்த

புதுடில்லி: டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.



latest tamil news



மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றால், போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.


latest tamil news



டில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால், 'கோவிட் பரவல் ஏற்படும்' எனக் கூறி போலீசார் மறுத்தனர். இதையடுத்து டில்லி சிங்குர் எல்லையில் இருந்து டில்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர். பிகேஎஸ் விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
22-ஜூலை-202117:47:59 IST Report Abuse
M  Ramachandran விவசாயிகள் என்று போராட்ட காரர்கள் என்று போடாதீர்கள்..முன்பு காமராஜர் அவர்கள் திருடர்களை ராஜ என்ற விகுதியை சேரத்து எழுதாதீர்கள் என்று ஊடகங்களுக்கு திருடன் என்று எழுதுங்கள் என்றார்.விவசாயிகள் என்ற போர்வய்க்குள் அதற்குள் ஒளிந்திருக்கும் தேச விரோதி சக்திகள் என்று போடுங்கள். இது தான் அவர்கள் கடேயஸீ மூச்சு.பெரு மூச்சு.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
22-ஜூலை-202120:06:37 IST Report Abuse
Priyan Vadanad"விவசாயிகள் என்ற போர்வய்க்குள் அதற்குள் ஒளிந்திருக்கும் தேச விரோதி சக்திகள்" தேசதுரோகம் என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் மனித நலவாழ்வு, வளவாழ்வின் எதிரிகளை என்ன சொல்ல?...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202117:03:26 IST Report Abuse
vpurushothaman எத்தனை நாளைக்கு டில்லியிலேயே " விவசாயம் " பண்ணுவீங்க
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
22-ஜூலை-202115:11:57 IST Report Abuse
 N.Purushothaman அடேயப்பா ...இன்னும் இருநூறு பேருங்க போராட்டத்துல இருக்காங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X