அரசியல் செய்தி

தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம்: கமல்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும்,
MNM, Kamalhaasan, Disappointed, Family Heads, Women, மநீம, மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், குடும்பத் தலைவி, இல்லத்தரசி, ஊதியம், ஏமாற்றம்

சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்கள் ஆகியும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் முன்வைத்த அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.


latest tamil news


இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ந்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அசாம் தேர்தல் வரை இது எதிரொலித்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.


latest tamil news


சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழகம், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜூலை-202108:59:37 IST Report Abuse
Nagarajan D எனக்கு கூட நீ உன் அடைத்த மனைவி /துணைவி பற்றி அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஜூலை-202104:40:00 IST Report Abuse
meenakshisundaram திமுக வைக்கண்டு பொது மக்கள் அஞ்சுவதே அவர்களின் வெற்றிக்கு காரணம் .எடுத்து சொல்லுங்க கமல் .ஏய்ச்சு பிழைக்கும் தொ ளிலே சரிதானா எண்ணிப்பாருங்க -அன்றே எம்ஜிஈயார் பாடிட்டாரே மூன்று படி அரிசி திராவிட நாடு நீட் தேர்வு ரத்து மது கடைகளை மூடுதல் .திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூடுதல் இன்னும் எவ்வளவு கூறி விட்டு வழுக்கி விழுந்த அவர்களை இன்னும் மக்கள் 'கண்டுக்கவே இல்லியே ?ஏனென்றால் பயம் ,பயம் ,பயம்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-202102:51:14 IST Report Abuse
Rajagopal எந்த கட்சியும், அதைத்தருகிறேன், இதைத்தருகிறேன் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் முன்பு, அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம், எங்கிருந்து பணம் வரும், நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வோம் என்று தேர்தல் நிர்வாகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இருக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து ஒப்புக்கொண்ட பிறகே மக்களுக்கு வெளியிட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் பெரிய அபராதம் அந்த கட்சிக்கு விதிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலில் நிற்க தகுதி கிடைக்காதவாறு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X