அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு: பன்னீர்செல்வம் - பழனிசாமி

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: ‛‛அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்,'' என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தனர்.அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளும் முழுமையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தார். கரூர் மாவட்ட
admk, ops, eps, அதிமுக, பன்னீர்செல்வம், பழனிசாமி, ஓபிஎஸ், இபிஎஸ், ரெய்டு, காழ்ப்புணர்ச்சி, விஜயபாஸ்கர்,

சென்னை: ‛‛அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்,'' என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளும் முழுமையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தார். கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ள அவர், அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக தி.மு.க., சார்பில் அப்போதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில், இன்று (ஜூலை 22) முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


latest tamil news


இது தொடர்பாக சென்னை, கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 23 இடங்கள் மற்றும் பெருங்களத்துார், மேற்கு மாம்பழத்தில் உள்ள அவரது உதவியாளர்கள் வீட்டிலும் லஞ்சஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக அரசு, தமிழக மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.


latest tamil news


குறிப்பாக அதிமுக.,விற்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக அமைச்சர் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


latest tamil news


இதற்கிடையே, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இன்று உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராகவே உள்ளது. பொய் வழக்கில் ரெய்டு நடக்கிறது.

இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசியலில் அபாயகரமான சூழலை ஏற்படுத்தும். சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் அ.தி.மு.க., தயாராக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
22-ஜூலை-202122:36:30 IST Report Abuse
m.viswanathan அண்ணா திமுக ஆரம்பிக்கும் முன் நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருந்திர்கள் ? ஏதேனும் கஷ்டப்பட்டு சிறு தொழில் தொடங்கி , வளர்ச்சி அடைந்து , பெரிய தொழில் அதிபர்கள் ஆகி , எத்துணை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து , முன்னேறி வந்திர்கள் ? சாதாரண கட்சி உறுப்பினராக இருந்து , கட்சியில் உயர் பதவி அடைந்தாலும் , இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா , அதிக பட்சமாக , அரசு வேலை , அல்லது தனியார் வேலை இல் ஓய்வு பெற்றால் , ஒரு 15 அல்லது 20 லட்சம் ரூபாய் தானே கிடைக்கிறது , நீங்கள் MLA அல்லது மந்திரியாய் இருந்தவன் எப்படி , சொந்தமாக , கல்லூரி , Multi Speciality Hospitals அனைத்தும் கட்டி , பணத்தில் கொழிக்க முடிகிறது , எங்கேயோ நம் ஜனநாயக அமைப்பில் தவறு இருக்கிறது , உங்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்து கொண்டு தலைமுறை , தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்து கொண்டு , குறிப்பிட்ட சாதியினரை வசை பாடி கொண்டு , வாழ்கிறீர்களே உங்கள் வம்சம் விளங்குமா , பாவிகளா , எம் தேசத்தை , கடந்த 60 ஆண்டுகளாக நாசம் செய்து , மக்கள் மீள முடியாமல் செய்து விட்டிர்களே . அணைத்து துறைகளிலும் கமிஷன் அடிக்க தெரிந்த உங்களுக்கு உழைப்பு என்றால் என்ன என்றாவது உங்களுக்கு தெரியுமா ,
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
22-ஜூலை-202120:59:19 IST Report Abuse
Nagercoil Suresh ரெய்டுனால் பலன் இருக்கிறதோ இல்லையோ இவர்கள் இருவரையும் திரும்பவும் கூட்டு சேர வைத்துவிட்டது...பேட்டியின் அவசரம் அச்சத்தை பிரதிபலிக்கிறது...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-ஜூலை-202120:57:13 IST Report Abuse
Dhurvesh ஏம்பா பொன்னேர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டியது கூட தெரியத அசமந்தங்கள் நீங்கள் இப்போ இதற்க்கு கும்பல ஓடிவருகிறீர்கள் அடுத்து நீர் தான் இலக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X