பைக்கில் சென்றவர் யானை தாக்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவர் யானை தாக்கி பலி

Added : ஜூலை 22, 2021
Share
கூடலுார் : முதுமலை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம், முதுமலை மாவனல்லா பகுதியில் வசித்து வந்தவர் இருதயராஜ்,65. இவர், நேற்று, காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மசினகுடி சென்றார். சாலையோரம் இருந்த காட்டு யானை அவரை தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுதியது. அதில், அவர் படுகாயம் அடைந்தார்.அவ்வழியாக
 பைக்கில் சென்றவர்  யானை தாக்கி பலி

கூடலுார் : முதுமலை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், முதுமலை மாவனல்லா பகுதியில் வசித்து வந்தவர் இருதயராஜ்,65. இவர், நேற்று, காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மசினகுடி சென்றார். சாலையோரம் இருந்த காட்டு யானை அவரை தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுதியது. அதில், அவர் படுகாயம் அடைந்தார்.

அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் அவரை மீட்டு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.சம்பவம் நடந்த பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X