ஸ்பெயினில் பார்லிமென்ட் நடவடிக்கை பாதிப்பு: காரணம்.. எதிர்க்கட்சிகள் இல்லை எலி!

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிவியல்: ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பிரேதசமான அண்டலூசியாவில் பார்லிமென்டில் உறுப்பினர்கள் முக்கியமான பிரச்னைக்காக ஓட்டுப்போட வாக்களிக்க இருந்த போது எலி ஒன்று நுழைந்ததால் பலர் பதறியடித்து இருக்கையை விட்டு ஓடினர்.இந்தியாவில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம், கோவிட் இரண்டாம் அலை, தடுப்பூசி தட்டுப்பாடு ஆகிய
ஸ்பெயின், பார்லிமென்ட், பாதிப்பு, எதிர்க்கட்சிகள்,எலி

சிவியல்: ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பிரேதசமான அண்டலூசியாவில் பார்லிமென்டில் உறுப்பினர்கள் முக்கியமான பிரச்னைக்காக ஓட்டுப்போட வாக்களிக்க இருந்த போது எலி ஒன்று நுழைந்ததால் பலர் பதறியடித்து இருக்கையை விட்டு ஓடினர்.

இந்தியாவில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம், கோவிட் இரண்டாம் அலை, தடுப்பூசி தட்டுப்பாடு ஆகிய பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன. இதனால் அவை நடவடிக்கை ஒத்தி வைக்கப்படுகிறது. இன்றும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதே போல் ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி பிரேதசமான அண்டலூசியாவில் பார்லிமென்ட் நடவடிக்கை பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் காரணமில்லை. அவைக்கு நடுவே சுற்றி வந்த எலி தான் காரணம்.

புதனன்று அண்டலூசியா பார்லிமென்ட் அவை நடவடிக்கை வழக்கம் போல தொடங்கியது. அப்பிராந்தியத்தின் முன்னாள் அதிபர் சூசனா டயஸ் என்பவரை செனட்டராக நியமிப்பது தொடர்பான வாக்கெடுப்புக்கு தயாராகினர்.


latest tamil news



சபாநாயகர் மர்தா போஸ்கட் பேசிக்கொண்டிருந்த போது அவைக்குள் எலி இருப்பதை கண்டு அதிர்ச்சியாகி மைக்கிலேயே கத்தியபடி வாயடைத்துப் போனார். அதனைக் கண்டு சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து வெளியே ஓடினர். ஒரு வழியாக பணியாட்கள் எலியை பிடித்துச் சென்று அப்புறப்படுத்தினர். அதன் பின் அவை நடவடிக்கை தொடங்கியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
23-ஜூலை-202106:31:24 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எதிர்கட்சிகளை எலிகளோடு ஒப்பிட்டது அருமை.
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-202122:50:47 IST Report Abuse
Jai காங்கிரசால் வேறு எந்த யுக்தியைம் கண்டுபிடிக்க முடியாது என்றால் அவர்கள் எலியையும் விடுவார்கள்
Rate this:
Cancel
22-ஜூலை-202120:59:19 IST Report Abuse
அப்புசாமி இதுக்கு முன்னாடி எலி ஓடி பார்த்ததில்லையா? இப்பிடி பதறுறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X