முடிவு எட்டாமல் முடிந்த சம்பள பேச்சு வார்த்தை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர் சங்க அலுவலகத்தில் நடந்தது.தொழிலாளர்களுக்கு தினமும், 600 ரூபாய் சம்பளம் வழங்க தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.தோட்ட அதிபர்கள் சங்க

கோவை : தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர் சங்க அலுவலகத்தில் நடந்தது.தொழிலாளர்களுக்கு தினமும், 600 ரூபாய் சம்பளம் வழங்க தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தோட்ட அதிபர்கள் சங்க ஆலோசகர் பாலச்சந்தர், தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்க செயலாளர் பிரதீப்குமார் உள்ளிட்டோருடன், தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது மற்றும் சி.ஐ.டி.யூ., புதிய தமிழகம் என, 14 தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.காலை, 10:00 முதல் மதியம், 2:30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில், சம்பளம் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை.

இதர, 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக, தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழைத்துப்பேச முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X