ஈரோடு: ஈரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராதாமணி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டெய்சி பேசினார். கொரோனா பரவல் ஊரடங்கு நிலையிலும், அங்கன்வாடி பணியாளர்கள் முழு அளவில் செயல்பட்டனர். அங்கன்வாடி மூலம் உலர் உணவு பொருட்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், கொரோனா கணக்கெடுப்பு பணி, ஓட்டுச்சாவடி அளவிலான கணக்கெடுப்பு, தடுப்பூசி பணி என பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. இதனால், இத்துறை சார்ந்த பணிகளை செயல்படுத்த முடிவதில்லை. அங்கன்வாடி பணி தவிர, பிற பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement