அணையில் இருந்து தண்ணீர் திறப்பு| Dinamalar

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Added : ஜூலை 22, 2021 | |
பவானி: பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்காக நேற்று முதல், நவ., 17 வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப நீர் இருப்பு, வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு, 400 கனஅடி வீதம்

பவானி: பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்காக நேற்று முதல், நவ., 17 வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப நீர் இருப்பு, வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு, 400 கனஅடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X