ஈரோடு மாவட்டத்தில் 10,700 பேருக்கு தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 10,700 பேருக்கு தடுப்பூசி

Added : ஜூலை 22, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5.10 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் சுழற்சி முறையிலும், ஓட்டுச்சாவடி வாரியாகவும் தடுப்பூசி போடுகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. இருப்பினும் ஒரு மையத்தில், 100 முதல், 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதால், கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5.10 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் சுழற்சி முறையிலும், ஓட்டுச்சாவடி வாரியாகவும் தடுப்பூசி போடுகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. இருப்பினும் ஒரு மையத்தில், 100 முதல், 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதால், கூட்டம் குறைந்தபாடில்லை. நேற்று, 107 இடங்களில், 10 ஆயிரத்து, 700 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று மாநகரில், 20 இடம் உட்பட அனைத்து இடங்களிலும் தலா, 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X