சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புளியம்பட்டி: கோவிலில் தூங்கி கொண்டிருந்த வாலிபரை, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். புன்செய்புளியம்பட்டி அருகே டாணாபுதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 26. இவர் நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் முன்புள்ள விநாயகர் கோவிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமு, 45, என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.

புளியம்பட்டி: கோவிலில் தூங்கி கொண்டிருந்த வாலிபரை, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். புன்செய்புளியம்பட்டி அருகே டாணாபுதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 26. இவர் நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் முன்புள்ள விநாயகர் கோவிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமு, 45, என்பவர் குடிபோதையில் வந்துள்ளார். இங்கே எதுக்கு தூங்குகிறாய் என தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். விஜயகுமார் கூச்சலிட்டதும், பொதுமக்கள் வந்துள்ளனர். அவர்கள் வருவதை பார்த்ததும், போதை ஆசாமி அரிவாளை சாக்கடையில் வீசி விட்டு தப்பினார். புளியம்பட்டி போலீசார் விசாரித்து, ராமுவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X