சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மர்ம மரணம்; போலீசில் மனைவி புகார்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஈரோடு: கணவர் மர்ம மரணம் குறித்து, போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் மனைவி புகாரளித்துள்ளார். ஈரோடு, அம்மன்கோவில் குமாரவலசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 52, பைனான்ஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சென்றார். இரவு வீட்டுக்கு செல்லவில்லை. போன் செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர்

ஈரோடு: கணவர் மர்ம மரணம் குறித்து, போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் மனைவி புகாரளித்துள்ளார். ஈரோடு, அம்மன்கோவில் குமாரவலசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 52, பைனான்ஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சென்றார். இரவு வீட்டுக்கு செல்லவில்லை. போன் செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் தகவல் இல்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:30 மணியளவில் பி.பெ.அக்ரஹாரம் கதவணை அடுத்த காளிங்கராயன் வாய்க்கால் அருகே மண் தரையில் இறந்து கிடந்தார். தன் கணவர் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அவரது மனைவி தரணிமொழி, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X