சொத்து பிரச்னையில் தொழிலாளி மீது தாக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து பிரச்னையில் தொழிலாளி மீது தாக்கு

Added : ஜூலை 22, 2021
Share
ஈரோடு: சொத்து பிரச்னையால் அண்ணன், தம்பி அடித்து உதைத்ததாக, பாதிக்கப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தியூர் ஆலாம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், 42, நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: நான் ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. எனது அண்ணண் சுரேஷ் மஞ்சள் மண்டி வைத்தும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். தம்பி சேகர் சூரம்பட்டி

ஈரோடு: சொத்து பிரச்னையால் அண்ணன், தம்பி அடித்து உதைத்ததாக, பாதிக்கப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தியூர் ஆலாம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், 42, நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: நான் ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. எனது அண்ணண் சுரேஷ் மஞ்சள் மண்டி வைத்தும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். தம்பி சேகர் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார். தந்தை தங்கவேல், ஒரு சொத்தை எனது பெயருக்கு எழுதி வைத்தார். அந்த சொத்தில் உள்ள கட்டடத்தை பழுது பார்த்து வாடகைக்கு விட்டுள்ளேன். என் சொந்த உழைப்பில் ஒரு மனை நிலம் வாங்கி உள்ளேன். இந்நிலையில் கடந்த, 19ல் என் வீட்டிற்கு எனது தந்தை தங்கவேல், அண்ணன் சுரேஷ், தம்பி சேகர், தாய் ஆகியோர் வந்து, தந்தை எழுதி கொடுத்த சொத்து, நான் கிரயம் செய்த நிலத்தையும் அவர்களது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என கூறினர். தனிப்பட்ட முறையில் வாங்கிய சொத்தை எழுதி கொடுக்க முடியாது என கூறியதால், ஆத்திரமடைந்த சேகர், சுரேஷ் ஆகியோர் என்னை தாக்கினர். பின்னர் என் மனைவி, மாமியாரையும் தாக்கினர். சொத்தை எழுதி தராவிட்டால் என்னையும், என் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து, நான் வைத்திருந்த சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள் வைத்திருந்த பெட்டியை எடுத்து சென்று விட்டனர். எனவே, என் சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X