குள்ளங்கரடு மக்கள் குடிநீரின்றி அவதி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தி நகராட்சியில் ஏற்பட்டுள்ள, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட குள்ளங்கரடு பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 3,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள். இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட,

புன்செய்புளியம்பட்டி: சத்தி நகராட்சியில் ஏற்பட்டுள்ள, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட குள்ளங்கரடு பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 3,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள். இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பபகுதி மக்கள், குடிநீருக்காக காலிக்குடங்களுடன் தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X