பொது செய்தி

தமிழ்நாடு

நோயாளிக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு?

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சேலம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தில், டீன் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், பெரிய வனவாசி, ஆயதாசனூரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 42. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்ததாரராக இருந்தார். அவரது கணவர் வெங்கடாசலம், 56, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சேலம் அரசு மருத்துவமனையில், கடந்தாண்டு ஒப்பந்தம்

சேலம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தில், டீன் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், பெரிய வனவாசி, ஆயதாசனூரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 42. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்ததாரராக இருந்தார். அவரது கணவர் வெங்கடாசலம், 56, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சேலம் அரசு மருத்துவமனையில், கடந்தாண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டது. கடந்த, 24ல் நடப்பாண்டு ஒப்பந்தத்துக்கு, முறையான ஆவணங்கள் தாக்கல் செய்து, மிக குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தோம். அதிக விலை குறிப்பிட்ட நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து டீனிடம் கேட்டபோது, கன்னங்குறிச்சி செந்தில்முருகன் குறைந்த விலை குறிப்பிட்டதால் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தவறான தகவல் கூறி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இது, ஒப்பந்த விதிக்கு முரணானது. உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ள டீன் மீது நடவடிக்கை தேவை. மறு ஒப்பந்தம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். டீன் வள்ளி கூறுகையில், ''மகேஸ்வரி தரப்பில் முறையான ஆவணங்கள் இல்லை. கடந்த முறை அவர் மீது புகார்கள் வந்ததால் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X