பா.ம.க.,வினர் மிரட்டல்: எஸ்.பி.,யிடம் பெண் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வினர் மிரட்டல்: எஸ்.பி.,யிடம் பெண் புகார்

Added : ஜூலை 22, 2021
Share
சேலம்: ஓமலூர், நாலுகால்பாலத்தை சேர்ந்தவர் வசந்தா, 51. இவர், சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம், நேற்று அளித்த புகார் மனு: கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறேன். 2020 மே, 8ல், பா.ம.க., மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில், 10 பேர் வீடு புகுந்து என் மகன் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தி கொன்றனர். குற்றவாளிகள் கைதாகி, சிறையில் உள்ள நிலையில், அவரது உறவினர்களும், கட்சியினரும் வழக்கை

சேலம்: ஓமலூர், நாலுகால்பாலத்தை சேர்ந்தவர் வசந்தா, 51. இவர், சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம், நேற்று அளித்த புகார் மனு: கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறேன். 2020 மே, 8ல், பா.ம.க., மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில், 10 பேர் வீடு புகுந்து என் மகன் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தி கொன்றனர். குற்றவாளிகள் கைதாகி, சிறையில் உள்ள நிலையில், அவரது உறவினர்களும், கட்சியினரும் வழக்கை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதுகுறித்து, அப்போதைய முதல்வர் பழனிசாமி, சேலம் கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் பலனில்லை. 2020 செப்., 9ல் ஜாமினில் வெளியே வந்தவர்கள், தொடர்ந்து எங்களை மிரட்டுகின்றனர். அவர்கள் ஜாமினை ரத்து செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதோடு, விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X