பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கலுக்கு அறிவுறுத்தல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தர்மபுரி டவுன் பஞ்., உதவி இயக்குனர், பஞ்., உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை நீர வள ஆதார செயற்பொறியாளர், நெடுஞ்சாலை கட்டுமான பராமரிப்பு அலுவலர், தமிழ்நாடு மின்உற்பத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள

தர்மபுரி: தர்மபுரி, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தர்மபுரி டவுன் பஞ்., உதவி இயக்குனர், பஞ்., உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை நீர வள ஆதார செயற்பொறியாளர், நெடுஞ்சாலை கட்டுமான பராமரிப்பு அலுவலர், தமிழ்நாடு மின்உற்பத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள கோவில்கள், நீர்நிலைகள், சாலைகள், பொது சொத்துக்கள், அபிஷ்வ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற விசாரணையில், அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது குறித்து, இன்று(22) முதல், 24 வரை கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு, வரும், 27ல் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு தாசில்தார்கள், மேற்கொண்ட நடவடிக்கை விபரத்தை வரும், 27ல், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அரசு வக்கீலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X