பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமடுவில் தடையை மீறி நுழைந்தவர்களுக்கு எச்சரிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி, சேலம் மாவட்ட எல்லையில் வேப்பாடி அருகே, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ளது ஆனைமடுவு அணைக்கட்டு. இதன் வழியாக ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். அடர்ந்த வன பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், நீரோடையில் குளித்தல், மது அருந்துதல், விலங்குகளை துன்புறுத்தல் போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால், வனப்பகுதியில் நுழைய

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி, சேலம் மாவட்ட எல்லையில் வேப்பாடி அருகே, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ளது ஆனைமடுவு அணைக்கட்டு. இதன் வழியாக ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். அடர்ந்த வன பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், நீரோடையில் குளித்தல், மது அருந்துதல், விலங்குகளை துன்புறுத்தல் போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால், வனப்பகுதியில் நுழைய வனத்துறை தடைவிதித்துள்ளது. வனவர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் நேற்று ஆனைமடு வனப்பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் தடை செய்யப்பட்ட நீரோடை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்த வனத்துறையினர் கடுமையாக எச்சரித்தும், வனகுற்ற தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X