பொது செய்தி

தமிழ்நாடு

2ம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுரிமை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: கொரோனா தொற்றை தடுக்க, பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், இரண்டாம் கட்ட டோஸ் செலுத்த வேண்டியவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று வரை, 3.44 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி

தர்மபுரி: கொரோனா தொற்றை தடுக்க, பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், இரண்டாம் கட்ட டோஸ் செலுத்த வேண்டியவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று வரை, 3.44 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில், 41 ஆயிரம் பேர் கோவாக்சினும், 3.03 லட்சம் பேர், கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இதில் முதல் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய சிலருக்கு, இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வர தாமதம் ஆகியுள்ளதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் டோஸ் செலுத்த, தற்போது காலக்கெடு முடிந்தவர்கள் கவலைப்பட தேவையில்லை. விரைவில், கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி வந்தவுடன், இரண்டாம் கட்ட கோவாக்சின் செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X