பொது செய்தி

தமிழ்நாடு

'181' மகளிர் உதவி மையம்: போலீசார் விழிப்புணர்வு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அரூர்: அரூரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 181 மகளிர் உதவி மையம் தொலைபேசி எண் அட்டையை பல்வேறு இடங்களில் போலீசார் வைத்துள்ளனர். தமிழக அரசின், 181 மகளிர் உதவி மையம் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, 24 மணி நேர உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டம், அரூரில், அனைத்து மகளிர்

அரூர்: அரூரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 181 மகளிர் உதவி மையம் தொலைபேசி எண் அட்டையை பல்வேறு இடங்களில் போலீசார் வைத்துள்ளனர். தமிழக அரசின், 181 மகளிர் உதவி மையம் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, 24 மணி நேர உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டம், அரூரில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண், 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் வன்முறைகள் குறித்து, போலீசார் மூலம் விசாரணை நடத்தி, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்த புகார்களை பெண்கள் மற்றும் குழந்தைகள், 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X