பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஏ.ஐ.டி.யு.சி., தீர்மானம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தர்மபுரி, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, கட்டட தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டத்தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். இதில், அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ள

தர்மபுரி: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தர்மபுரி, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, கட்டட தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டத்தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். இதில், அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ள ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு, தர்மபுரி மாவட்டத்திலிருந்து, 1,000 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தர்மபுரி மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் அளிக்கப்படும், கேட்பு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு கல்வி, மகப்பேறு, இயற்கை மரணத்திற்கு வழங்கும் நிதியை, உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களான சிமென்ட், மணல், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை, அரசு கட்டுப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், மாநிலக்குழு உறுப்பினர் முனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X