பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுக்கு 4,800 பேர் தகுதி

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, ஆயுதப்படை மைதானத்தில் வரும், 26ல் துவங்கும், இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில், 4,800 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.தமிழக சீருடை தேர்வு போலீஸ் குழும் சார்பில், இரண்டாம் நிலை போலீஸ், மாநகர், மாவட்ட ஆயுதப்படைக்கு, 3,784, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு, 6,545, சிறைத்துறைக்கு, 119, தீயணைப்புத்துறையினருக்கு, 1,311 பேர் என, மொத்தம், 11 ஆயிரத்து, 741 காலி பணியிடங்கள்

தர்மபுரி: தர்மபுரி, ஆயுதப்படை மைதானத்தில் வரும், 26ல் துவங்கும், இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில், 4,800 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தமிழக சீருடை தேர்வு போலீஸ் குழும் சார்பில், இரண்டாம் நிலை போலீஸ், மாநகர், மாவட்ட ஆயுதப்படைக்கு, 3,784, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு, 6,545, சிறைத்துறைக்கு, 119, தீயணைப்புத்துறையினருக்கு, 1,311 பேர் என, மொத்தம், 11 ஆயிரத்து, 741 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கான எழுத்து தேர்வில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். இத்தேர்வில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்கள், பெண்கள் என, 4,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு வரும், 26ல் இருந்து, தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் உடற் தகுதி தேர்வு நடக்கிறது. இத்தேர்வை கண்காணிக்கவும், தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தமிழக அரசின் உத்தரவின்படி, கோவை மண்டல ஐ.ஜி., சுதாகர், பல்வேறு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X