பொது செய்தி

தமிழ்நாடு

மாதந்தோறும் அலகுத்தேர்வுகள்: கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அறிவிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வுகள் நடத்தவேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ., பாலமுரளி அறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தின், நான்கு கல்வி மாவட்டங்களில் பயிலும், 10 மற்றும், 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வுகள் நடத்தவேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ., பாலமுரளி அறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தின், நான்கு கல்வி மாவட்டங்களில் பயிலும், 10 மற்றும், 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை பார்க்க செய்ய வேண்டும். மாணவ, மாணவியரை தனி குழுக்களாக பிரித்து, 'வாட்ஸ் ஆப்'பில் ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அதில் தலைமை ஆசிரியரும் இருக்க வேண்டும். மேலும் மாதந்தோறும் அதிலிருந்து வினாத்தாள் தயாரித்து, 'வாட்ஸ் ஆப்' மூலமாகவே அலகு தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் மாதாந்திர அலகு தேர்வுகள் நடத்த வேண்டும். 'வாட்ஸ் ஆப்' இல்லாத மாணவர்கள், நண்பர்களிடமிருந்து வினாத்தாள் பெற்று, தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் பெயர் விபரம் பதில்களை தனித்தாளுடன் இணைத்து, பெற்றோர் கையொப்பத்துடன், ஆசிரியர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்ப வேண்டும். மாணவர்கள் அனுப்பிய விடைத்தாள்களின் மதிப்பெண் பட்டியலை, ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டும். தேர்வு நேரம், காலை, 10:00 முதல், 11:30 மணி வரை, 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X