பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனத்துக்கு 100 சதவீத மானியம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: நுண்ணீர் பாசனத்துக்கு குழாய் பதிக்க ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் வரை மானியம் உள்ளது. ஆழ்குழாய் கிணறுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியம், மின் அல்லது டீசல் மோட்டார் வாங்க, 15 ஆயிரம் ரூபாய், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பயிருக்கு நீரை கொண்டு செல்ல, 10 ஆயிரம் ரூபாய், தொட்டிகள் கட்டி தண்ணீரை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: நுண்ணீர் பாசனத்துக்கு குழாய் பதிக்க ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் வரை மானியம் உள்ளது. ஆழ்குழாய் கிணறுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியம், மின் அல்லது டீசல் மோட்டார் வாங்க, 15 ஆயிரம் ரூபாய், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பயிருக்கு நீரை கொண்டு செல்ல, 10 ஆயிரம் ரூபாய், தொட்டிகள் கட்டி தண்ணீரை சேமித்து, நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள கன மீட்டருக்கு, 350 ரூபாய் வீதம் அதிகபட்சமாக, 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெற்ற நுண்ணீர் பாசன நிறுவன மூலம் சொட்டுநீர் பாசனம், மானியம் பெற கணினி பட்டா, அடங்கல், நில வரைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியற்றுடன் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ, எம்.ஐ.எம்.ஐ.எஸ்., என்ற இணையத்தளத்திலோ பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X