பொது செய்தி

தமிழ்நாடு

'என்கவுன்டர்' பட்டியல்: சாமியார், வக்கீல் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருச்சி: திருச்சியில் ரவுடிகள், 'என்கவுன்டர்' பட்டியல் வெளியிட்ட சாமியார், அவருடன் பேசிய வக்கீல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், அல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற தேஜஸ் சுவாமி, 31. டெல்டா மாவட்டங்களில், 12 பேர் உட்பட தமிழகம் முழுதும், 42 ரவுடிகள், போலீசாரின் என்கவுன்டர் பட்டியலில் இருப்பதாக, இவர், வக்கீல் ஒருவருடன் பேசிய ஆடியோ,

திருச்சி: திருச்சியில் ரவுடிகள், 'என்கவுன்டர்' பட்டியல் வெளியிட்ட சாமியார், அவருடன் பேசிய வக்கீல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், அல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற தேஜஸ் சுவாமி, 31. டெல்டா மாவட்டங்களில், 12 பேர் உட்பட தமிழகம் முழுதும், 42 ரவுடிகள், போலீசாரின் என்கவுன்டர் பட்டியலில் இருப்பதாக, இவர், வக்கீல் ஒருவருடன் பேசிய ஆடியோ, கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பரவியது. சாமியார் பாலசுப்பிரமணியனை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அவரது தகவல்படி, பொன்மலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 43 என்ற வக்கீலையும் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து வக்கீல்கள் சிலர், நேற்று பொன்மலை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிய போலீசார், பாலசுப்பிரமணியன், கார்த்திக் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X