பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., மூன்றாக பிரிப்பு: மாஜி அமைச்சரின் பகுதிகள் குறைப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட, அ.தி.மு.க., மூன்றாக பிரிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் கருப்பணனிடம் இருந்து மூன்று தொகுதிகள் பறிக்கப்பட்டு, புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகள் ஈரோடு மாநகர மாவட்டமாக உள்ளது. இதன் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளார். ஈரோடு புறநகர்

ஈரோடு: ஈரோடு மாவட்ட, அ.தி.மு.க., மூன்றாக பிரிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் கருப்பணனிடம் இருந்து மூன்று தொகுதிகள் பறிக்கப்பட்டு, புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகள் ஈரோடு மாநகர மாவட்டமாக உள்ளது. இதன் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளார். ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., செயல்பட்டார். இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க., - ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டமாக பிரித்துள்ளனர். புறநகர் கிழக்கு மாவட்டத்தில் பவானி, பெருந்துறை தொகுதியும், புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி, அந்தியூர், பவானிசாகர் தொகுதிகள் உள்ளபடி பிரித்துள்ளனர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கருப்பணனும், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இப்பதவிகள் தவிர, பிற சார்பு அமைப்பு நிர்வாகிகள் தற்போது உள்ளபடி தொடர்வதாகவும், விரைவில் மாற்றி அமைக்கப்படும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X