சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்டவர் ஈரோட்டில் எரித்து கொலை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்டவர் தலையில் கல்லை போட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இங்கு ஈமக்காரியங்கள் செய்ய திறந்தவெளி கட்டடம் உள்ளது. இங்கு நேற்று காலை ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அப்பகுதி மக்கள், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்

ஈரோடு: ஈரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்டவர் தலையில் கல்லை போட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இங்கு ஈமக்காரியங்கள் செய்ய திறந்தவெளி கட்டடம் உள்ளது. இங்கு நேற்று காலை ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அப்பகுதி மக்கள், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், ஈரோடு சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த அசேன், 52, திருமணமாகாதவர் என்றும், சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் அசேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பின், உடலை யாருக்கும் தெரியாமல் எரித்தது தெரியவந்துள்ளது. எஸ்.பி., சசி மோகன், டவுன் டி.எஸ்.பி., ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை நடந்த பகுதி ஆள் நடமாட்டம் குறைவானது. மது குடிக்க, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் நடமாட்டமே அதிகம் இருக்கும். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி, கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X