சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழுத்தறுத்து தாய் கொலை: மகன் கைது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அருகே, தாயின் கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் முருகாயி, 70. மூத்த மகன் வெங்கடாசலம், 50. இளையமகன் பொன்னுசாமி, 40; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று இரவு, 7:00 மணியளவில் தன் தாயாருடன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்த போது, பொன்னுசாமி திடீரென கத்தியால் தாயின்

குளித்தலை: குளித்தலை அருகே, தாயின் கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் முருகாயி, 70. மூத்த மகன் வெங்கடாசலம், 50. இளையமகன் பொன்னுசாமி, 40; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று இரவு, 7:00 மணியளவில் தன் தாயாருடன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்த போது, பொன்னுசாமி திடீரென கத்தியால் தாயின் கழுத்தறுத்து கொலை செய்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனர். விசாரணையில், பொன்னுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் எனவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தன் அண்ணன் வெங்கடாசலத்தை கழுத்தில் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. பொன்னுசாமிக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X