பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு குடுவைகள், 3 கத்தி துண்டுகள்: மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அகழாய்வில், மூன்று கால்கள் உள்ள நான்கு குடுவைகள், மூன்று கத்தி துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில், மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு நடகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில், தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அகழாய்வில், மூன்று கால்கள் உள்ள நான்கு குடுவைகள், மூன்று கத்தி துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில், மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு நடகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது. துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், மூன்று கால்கள் உள்ள, நான்கு சிறிய குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. கடந்த, 15 நாட்களுக்கு முன் பெருங்கற்காலத்தை சேர்ந்த, 70 செ.மீ., நீள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதே பகுதியில், இறந்தவர்களை புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும், மூன்று கத்தி துண்டுகள், மூன்று கால்கள் உள்ள, நான்கு சிறிய குடுவைகள், ஒரு தண்ணீர் குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X