சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்திய பெண் மாயம்: வீட்டின் முன் திரண்ட மக்கள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், ஏலச்சீட்டு நடத்திய பெண் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு மாயமானதாக கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் அப்பெண்ணின் வீட்டின் முன் திரண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மனைவி லதா, 50; இவர் கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், அப்பகுதியை சேர்ந்த

ஓசூர்: ஓசூரில், ஏலச்சீட்டு நடத்திய பெண் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு மாயமானதாக கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் அப்பெண்ணின் வீட்டின் முன் திரண்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மனைவி லதா, 50; இவர் கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சீட்டு போட்டிருந்தனர். சீட்டு எடுத்தவர்களுக்கு சரியாக பணம் வழங்கி வந்த லதா, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, பணம் வழங்காமல் இழுத்தடித்துள்ளார். பணத்தை கேட்கும் போதெல்லாம், பல காரணங்களை கூறி தட்டி கழித்துள்ளார். கடந்த சில நாட்களாக லதாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. அதனால், சீட்டு எடுத்தவர்கள் பணத்தை வாங்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் நேற்று, பூட்டியிருந்த லதாவின் வீட்டின் முன், பாதிக்கப்பட்டவர்கள், 30க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின் அவர்கள், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டதாக கூறி, மத்திகிரி போலீசில் நேற்று புகாரளிக்க சென்றனர். கோடிக்கணக்கில் மோசடி என மக்கள் கூறியதால், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ய அறிவுறுத்திய போலீசார், அவர்களை அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X