பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் வரி குறைப்பு, காலாவதி சுங்கச்சாவடிகளை மூட 'கெடு': ஆக.,9க்கு பின் ஸ்டிரைக் அறிவிக்க லாரி உரிøயாளர்கள் முடிவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆக., 9ம் தேதிக்குள், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்,'' என, 'சிம்டா' பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறினார்.தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் (சிம்டா), செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், தலைவர் கோபால்நாயுடு தலைமையில், நாமக்கல்லில்

நாமக்கல்: ''டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆக., 9ம் தேதிக்குள், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்,'' என, 'சிம்டா' பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறினார்.


தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் (சிம்டா), செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், தலைவர் கோபால்நாயுடு தலைமையில், நாமக்கல்லில் நடந்தது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, அதன் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, ஓராண்டில் டீசல் விலை, 28 ரூபாய் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 36 முறை டீசல் விலை உயர்த்தி உள்ளனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், டீசல் லிட்டருக்கு, 4 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். அதை இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக செயல்படுத்தினால், அனைத்து மாநிலங்களும் குறைப்பதற்கு, நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம். நாடு முழுவதும் உள்ள, 571 சுங்கச்சாவடிகளில், குறிப்பாக, தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகளில், 33ல், ஏற்கனவே, வசூல் முடித்துவிட்டது. அதில், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைஞிடித்துக் கொண்டிருக்கின்றனர். மாநில அரசும், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, நமது மக்களை காப்பாற்ற வேண்டும். குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா போன்ற அனைத்து தென்மாநில முதல்வர்கள் ஒன்று கூடி, இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும். ஸ்பீடு கவர்னர், ஒளிரும் பட்டை போன்ற தவறை, கடந்த ஆட்சியாளர்போல் செய்யாமல், இந்த சட்டத்தை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும், ஆக., 1 முதல், லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கூலி, இறக்கு கூலி கொடுக்கமாட்டார்கள். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு, வரும், ஆக., 9 வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எடுக்காவிட்டால், அவசர கூட்டத்தை கூட்டி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். டீசல் விலையை பொறுத்தவரை, டாலர் விலைக்கு, 15 சதவீதம் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், 260 சதவீதம் வரியை ஒரு லிட்டர் டீசல் மீது விதிக்கின்றனர். தென்மாநிலம் முழுவதும், 26 லட்சம் லாரிகள் உள்ளன. அவற்றில், தற்போது, 7 லட்சம் லாரிகள் மட்டுமே இயங்குகின்றன. ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. வாகனங்களுக்கு பயோ டீசல் பயன்படுத்துவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X