பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் நீர்திறப்பு குறைப்பு; மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று கர்நாடகாவின் கபினி அணை நீர் வரத்து வினாடிக்கு, 3,000 கனஅடி, கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, 8,000 கனஅடியாக சரிந்தது. இரு அணைகளில் வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் மட்டும்

மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று கர்நாடகாவின் கபினி அணை நீர் வரத்து வினாடிக்கு, 3,000 கனஅடி, கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, 8,000 கனஅடியாக சரிந்தது. இரு அணைகளில் வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் மட்டும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 16 ஆயிரத்து, 301 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 14 ஆயிரத்து, 514 கனஅடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 73.51 அடியாக இருந்தது. வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு குறைந்ததால், வரும் நாளில் மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக சரிய தொடங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X