பரபரப்பான பெலகாவி ஏர்போர்ட் விமான சேவை, பயணியர் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பரபரப்பான பெலகாவி 'ஏர்போர்ட்' விமான சேவை, பயணியர் அதிகரிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
பெங்களூரு:கர்நாடகாவின் பெலகாவி விமான நிலையம், மாநில அளவில் மூன்றாவது அதிகமான விமானங்களை இயக்கிய பெருமையை பெற்றுள்ளது.கர்நாடகாவில் பெரும்பான்மையான விமான நிலையங்களில், ஐம்பது சதவீதம் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இயக்கப்படும் விமான சேவைகளிலும், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.பெலகாவி விமான நிலையம் இதிலிருந்து மாறுபட்டு கர்நாடகாவின் அதிக

பெங்களூரு:கர்நாடகாவின் பெலகாவி விமான நிலையம், மாநில அளவில் மூன்றாவது அதிகமான விமானங்களை இயக்கிய பெருமையை பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பெரும்பான்மையான விமான நிலையங்களில், ஐம்பது சதவீதம் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இயக்கப்படும் விமான சேவைகளிலும், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.பெலகாவி விமான நிலையம் இதிலிருந்து மாறுபட்டு கர்நாடகாவின் அதிக விமானங்களை இயக்கி நிலையங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

கர்நாடகாவின் பழமையான நிலையங்களில் பெலகாவியில் அமைந்துள்ள சம்ரா விமான நிலையமும் ஒன்று. 2019 வரை, விமானங்களும் பயணிகளும் அதிகம் வராத நிலையத்தில் கொரோனா காலத்தில் நிலை மாறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.புதிய தகவல்படி, கொரோனாவுக்கு முன்பை விட, கொரோனாவிற்கு பின்தான், பெலகாவி நிலையத்தில், அதிக விமான சேவைகளும், பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு, ஏப்., முதல் ஜூன் வரை 1,640 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2019ல் அதே கால கட்டத்தில் 730 விமான சேவை மட்டுமே பதிவாகியுள்ளது.மேலும், பயணியர் எண்ணிக்கை ஒப்பீட்டிலும், ஏப் - ஜூன் மாதத்தில் 2019ல் 32 ஆயிரத்து, 113 பேர், 2021ல் 51 ஆயிரத்து, 190 பேரும் பயணித்துள்ளனர்.

தொடர்ந்து, மங்களூரு சர்வதேச விமான நிலையம் மற்றும் பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையங்களும், பரப்பரப்பான நிலையங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. ஹூப்பள்ளி விமான நிலையம், 2019ல் மாநில அளவில் மூன்றாம் இடத்தில் இருந்தது. கொரோனா இரண்டாம் அலையால் விமான சேவைகளும் குறைந்து, பயணியர் வருகையும் குறைந்துவிட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X