பொது செய்தி

இந்தியா

மழை நீர் தேங்கிய பகுதிகளில் கொசு முட்டை அழிக்க முடிவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில், இரண்டு வாரங்களாக மழை பெய்கிறது. மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், கொசுக்களின் முட்டைகள் வளரும் இடங்களை கண்டுபிடித்து அழிக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.ஆண்டு தோறும் மழைக்காலத்தில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உட்பட, பல்வேறு நோய்கள் மக்களை வாட்டி வதைக்கும்.ஆனால் ஓராண்டாக, கொரோனா தொற்று அதிகரித்ததால், மற்ற நோய்களை பற்றி

பெங்களூரு:பெங்களூரில், இரண்டு வாரங்களாக மழை பெய்கிறது. மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், கொசுக்களின் முட்டைகள் வளரும் இடங்களை கண்டுபிடித்து அழிக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஆண்டு தோறும் மழைக்காலத்தில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உட்பட, பல்வேறு நோய்கள் மக்களை வாட்டி வதைக்கும்.ஆனால் ஓராண்டாக, கொரோனா தொற்று அதிகரித்ததால், மற்ற நோய்களை பற்றி பெங்களூரு மாநகராட்சி, அக்கறை காண்பிக்கவில்லை. அதுமட்டுமின்றி, மக்களும் கூட துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அந்தந்த பருவ காலத்தில் ஏற்படும் நோய்கள் பாதிக்கவில்லை.

தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையும், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தொடர் மழை பெய்கிறது. தண்ணீர் நிற்கும் இடங்களில், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.எனவே பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் ஒருங்கிணைந்து, கொசுக்களின் முட்டை வளரும் இடங்களை கண்டுபிடித்து, கொசு முட்டைகளை அழிக்க திட்டமிட்டனர்.

கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த, 13 ஆரம்ப சுகாதார மையங்களின் ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள் ஆய்வை துவங்கியுள்ளனர். மொத்தம், 166 இடங்களில் ஆய்வு நடந்தது. 40 இடங்களில் கொசுக்களின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கே.ஜி.ஹள்ளியில், 55 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 38 இடங்களில், கொசுக்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.வீட்டின் சுற்றுப்புற பகுதிகளை, துாய்மையாக வைத்திருக்கும்படி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொம்மலுார் மருத்துவமனை சுற்றுப்பகுதியில், 11 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், ஒரு இடத்திலும், பந்தரபாளையாவிலும் ஐந்து இடங்களில் நடத்திய ஆய்வில், ஒரு இடத்தில் கொசுக்களின் முட்டை கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X