பொது செய்தி

இந்தியா

மரங்களை சேதப்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ளணும்!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் மரங்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார இணைப்புகள் வழங்குவதும், பிற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் கூடாதென மாநகராட்சி வனப்பிரிவு எச்சரித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மற்றும் 'பெஸ்காம்' மின்சார நிறுவனத்தின் இணைப்பு பணிகளால் மரங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதை கண்டித்து, சமூக ஆர்வலர்

பெங்களூரு:பெங்களூரில் மரங்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார இணைப்புகள் வழங்குவதும், பிற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் கூடாதென மாநகராட்சி வனப்பிரிவு எச்சரித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மற்றும் 'பெஸ்காம்' மின்சார நிறுவனத்தின் இணைப்பு பணிகளால் மரங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதை கண்டித்து, சமூக ஆர்வலர் தாத்ரயா தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்தார்.பெங்களூரு தொம்மலுார் மற்றும் ஈஜிபுரா இடையிலான உள்வட்ட சாலைகளில், மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி வனப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெஸ்காம் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கவனமுடன் கேபிள்களை கொண்டு செல்லும் பணிகளை செய்ய வேண்டும். பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளிலும் மரங்களுக்கு பாதிப்பு வராத வகையில் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X