சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக பா.ஜ., துணை தலைவர் துரைசாமி: 150 ஆண்டு கால காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அடையவில்லை. எதையாவது பேசுவது, எழுதுவது என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள அக்கட்சி, சரியான பாதையில் செல்லவில்லை. பிரதமர் மோடி கேட்டு கொண்டும், கொரோனா குறித்தும் விவாதம் செய்ய முன்வரவில்லை என்றால், மக்கள் மன்றம், காங்கிரசை எப்படி நம்பும்?'டவுட்' தனபாலு: மக்கள் தான், காங்கிரசை

'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., துணை தலைவர் துரைசாமி: 150 ஆண்டு கால காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அடையவில்லை. எதையாவது பேசுவது, எழுதுவது என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள அக்கட்சி, சரியான பாதையில் செல்லவில்லை. பிரதமர் மோடி கேட்டு கொண்டும், கொரோனா குறித்தும் விவாதம் செய்ய முன்வரவில்லை என்றால், மக்கள் மன்றம், காங்கிரசை எப்படி நம்பும்?

'டவுட்' தனபாலு: மக்கள் தான், காங்கிரசை நம்பவில்லை என்பது, அதன், 15 - 20 ஆண்டு கால வரலாற்றை பார்த்தால் நன்கு விளங்குமே. காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கும் செயலை, இப்போதைய முன்னணி தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா செய்து வருகின்றனரோ என்ற, 'டவுட்' அக்கட்சியினருக்கே வந்து விட்டது!


தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணையமைச்சர் முருகன்:
முதல் முறையாக, அருந்ததியர் ஜாதியை சேர்ந்த ஒருவரான நான், மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், என்னை பார்லிமென்டில் அறிமுகம் செய்ய விடாத அளவுக்கு, காங்., தலைமையில் எதிர்க்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

'டவுட்' தனபாலு: நாட்டு மக்கள் அனைவருக்குமே காங்கிரசின் செயல், வருத்தத்தை தான் அளிக்கிறது. ஒவ்வொரு முறை பார்லிமென்ட் கூடும் போதும், ஏதாவது ஒரு விவகாரத்தை எழுப்பி, பார்லிமென்டை சீர்குலைப்பதையே அக்கட்சி வாடிக்கையாக கொண்டுள்ளது. இதன் மூலம், நாட்டு மக்களிடம் சொல்ல, அந்த கட்சிக்கு ஏதும் இல்லையோ என்ற, 'டவுட்' எழுகிறது!


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி
: 'தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு, பி.பார்ம்., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்' என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், வேறு அரசு பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான, பி.பார்ம்., பட்டதாரிகள் பயனடைவர்.

'டவுட்' தனபாலு: உங்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அடுத்த சில நாட்களில் அரசு உத்தரவை மாற்றி, பி.பார்ம்., படித்தவர்களுக்கு நன்மை செய்துள்ளது, தி.மு.க., அரசு. இதை பார்க்கும் போது, அரசியல் தலைவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, செயல்படுத்த தனி அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் நியமித்திருப்பாரோ என்ற, 'டவுட்' வருகிறது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-ஜூலை-202106:28:24 IST Report Abuse
D.Ambujavalli கட்சியினர் எல்லாம் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தது போல் லாபம் காண கட்சி மாறுகிறார்கள் மீதம் உள்ளவர்களுக்கு அடித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை தாயும், பிள்ளையாக கட்சிக்கு காரியம் செய்வதில் தான் முனைந்திருக்கிறார்கள் காங்கிரஸ் இனி மெல்ல சாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X