சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

யார் உண்மையான 'ஹீரோ?'

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
யார் உண்மையான 'ஹீரோ?'கே.பாரதிமோகன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கதாநாயகன், சமூகத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பதும், 50 ரவுடிகளை ஒரே நேரத்தில் அடித்து துாக்குவதும் சினிமாவில் மட்டும் தான். நிஜத்தில் அவர்களின் நேர்மை என்பது கேள்விக்குறி தான்.கறுப்பு பணம் அதிகம் புழங்குவதே சினிமா துறையில் தானே... அவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது


யார் உண்மையான 'ஹீரோ?'கே.பாரதிமோகன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கதாநாயகன், சமூகத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பதும், 50 ரவுடிகளை ஒரே நேரத்தில் அடித்து துாக்குவதும் சினிமாவில் மட்டும் தான். நிஜத்தில் அவர்களின் நேர்மை என்பது கேள்விக்குறி தான்.கறுப்பு பணம் அதிகம் புழங்குவதே சினிமா துறையில் தானே... அவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?பல கோடி ரூபாய் செலவழித்து வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யும் நடிகர் விஜய், நம் நாட்டின் நலனுக்காக சில லட்சம் ரூபாய் வரி கட்ட மறுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.நடிகர் விஜய் தொடுத்த வழக்கில், 'சினிமா கதாநாயகர்கள் நிஜ வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்' என, நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ., போன்ற சொகுசு கார் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இந்த இரண்டு கார்களுக்கும் நுழைவு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும் என, நடிகர் விஜய் தனித்தனியாக வழக்கு போட்டுள்ளார்.யானை வாங்கியவன் அங்குசம் வாங்க சங்கடப்பட்ட கதையாக, இந்த பிரச்னை உள்ளது.'நடிகர்கள் சினிமாவில் பேசுவதற்கு சம்பந்தமில்லாமல், பொது வாழ்க்கையில் நடந்து கொள்ள கூடாது. அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைத்து, தன்னை உயர்த்திய மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்' என, நீதிபதி சொல்லியிருக்கிறார்.சினிமா பார்ப்போர் அனைவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் தான் மிக அதிக கட்டணம் செலுத்தி, தியேட்டருக்கு செல்கின்றனர்.அவர்களின் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ., போன்ற சொகுசு கார்களை இறக்குமதி செய்யும் நடிகர், வரிச்சலுகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதை, அப்பாவி மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு தடவை, 'சர்வீஸ்' செய்ய, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். அந்த அளவிற்கு கூட இந்த தேசத்திற்கு வரி கட்ட வேண்டாம் என நினைப்பது எவ்வகையில் நியாயம்?நாடு சுதந்திரம் அடைந்ததும், 550க்கும் மேற்பட்ட சிற்றரசர்கள் தங்கள் மணிமுடியை இறக்கி வைத்து, சமஸ்தானங்களை இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுத்தனர்.தியேட்டர் எனும் இருட்டறைக்குள் சினிமா எனும் மாய பிம்பத்தில் மட்டுமே அவர்கள் கதாநாயகர்கள். நிஜத்தில், நம் நாட்டிற்காக பாடுபட்டோர் மட்டுமே கதாநாயகர்கள் என்பதை தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


கழகத்தினரின்'சாதனை!'நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த 2019ம் ஆண்டுக்கான, மத்திய தணிக்கை குழு அறிக்கையில், மின் வாரியத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில், கடந்த ஆட்சியில், 2018 -- 2019ம் ஆண்டில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.அ.தி.மு.க., ஆட்சி அமைந்த போது, இதே போன்ற இழப்பு குற்றச்சாட்டு, தி.மு.க., மீது சுமத்தப்பட்டது.கழகங்கள் இரண்டுமே ஒன்றை ஒன்று குற்றம் சொல்லியபடியே இருக்கும். கழகத்தினர் இழப்பு ஏற்படாமல் ஆட்சி நடத்தவே மாட்டார்கள். அவை, ஊழலில் பிறந்து வளர்ந்தவை.தமிழக மக்களின் அறியாமையால் தான், இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.தமிழகத்தில் ஊழலை துவக்கியவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து திறம்பட நடத்தியவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா.ஜெ., வழி வந்த ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்.,சும், ஊழல் கதவை அகல திறந்து விட்டனர்.தமிழகம் ஊழல்வாதிகளால் தான் ஆளப்படுகிறது. தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், 'தமிழகத்தில் விஷக் கிருமிகள் பரவி விட்டன' என்றார்; அது உண்மையாகி விட்டது!கழகத்தினர் கொள்ளையடிப்பதில் தான் போட்டி போட்டு, 'சாதனை' படைக்கின்றனர்!


சிரமத்தில் சமையல் தொழிலாளர்கள்!ஏ.பாலன், தலைவர், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுதும் சமையல் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களுடைய வாழ்வாதாரம், கொரோனா காலத்தில் மிகவும் மோசமாகி உள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நபர்கள், 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது.திருமண மண்டபத்தில் பதிவு செய்ய வருவோரிடமும், நிகழ்ச்சியில் அதிக கூட்டம் கூட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.துாய்மை பணியாளர், அலங்கார பணி செய்வோர், சமையல் தொழிலாளர்கள் என, ஒரு திருமண நிகழ்ச்சியின் பின்னணியில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.கொரோனா விதிமுறையால், திருமண விழாவை கோவிலில் எளிய முறையில் நடத்தி விடுகின்றனர். இதனால், திருமண மண்டபத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரிய அளவில்
பாதிக்கப்படுகின்றனர்.கடந்த ஓராண்டாக சமையல் தொழிலாளர்கள், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர்.வரும் மாதங்களில் முகூர்த்த தினங்கள் அதிகளவில் வருவதால் மண்டபத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் அதிக நபர்களை பங்கேற்க, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.தனி மனித இடைவெளியுடன், முக கவசம், சானிடைசர் அனைத்தும் உபயோகித்து, நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்துவோம். ஒரு டேபிளில் இரு இருக்கைகள் மட்டும் போட்டு, உணவு பரிமாறுவோம்.தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வில் மளிகை, இறைச்சி, மது கடைகள் திறந்திருக்கின்றன; போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமண மண்டபங்களுக்கும் அனுமதி வழங்கி, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். எங்களின் பரிதாப நிலையை தமிழக அரசு உணருமா?

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
23-ஜூலை-202112:59:10 IST Report Abuse
Krish இப்போது பல சானல்களில் காமராசர் புகழ், அவரது பாராட்டத்தக்க செயல்கள், பிறர்க்கு மதிப்பு அளிக்கும் தன்மை, அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் அளித்து வந்த மரியாதை முக்கியமாக குழந்தைகளின் கல்வி கண்ணை திறந்ததுபற்றி வருகின்றன. ஆனால் திராவிட கட்சிகள் அவரை 'ஒரு சாதிக்காரகருணனுக்கு சொந்தமாக சித்தரிக்கின்றன. எனக்கு தெரிந்தவரை 'நாடார் சமூகத்தினர்' பிறர் காலில் விழாமல் ' முன்னேறியுள்ளனர்' காமராசரை தோற்கடித்த திராவிட கிருமிகளை அவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். மற்றும் இப்போதுள்ள புதிய காங்கிரஸ் காரர்கள் வெட்கம் இல்லாமல் திராவிட கட்சிகளின் ஆதரவை வேண்டுவதை தடுக்க வேண்டும். பக்கத்துக்கு கர்நாடகாவில் காங்கிரஸ் இன்றும் ' இளமையுடன் ஒரு பலம் மிக்க கட்சியாக இருக்கிறது. அதேபோல் தமிழக காங்கிரஸ் தன காலில் நின்று , காமராசர் ஆட்சியை மீண்டும் அரியணையில் ஏற்ற வேண்டும் . இரண்டு திராவிட கட்சிகளும் ' ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இதிற் சொன்னது பச்சைத்தமிபோலன் காமராசர் ., இதை நாம் நினைவு கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
23-ஜூலை-202107:10:25 IST Report Abuse
chennai sivakumar "நிஜத்தில், நம் நாட்டிற்காக பாடுபட்டோர் மட்டுமே கதாநாயகர்கள் என்பதை தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் " - மிக அருமையாக அடித்து சொல்லும் வாசகரின் அறிவுரையை இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு உரைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X