சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., பொறுப்பாளரை ஓரங்கட்டும் தலைமை!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தி.மு.க., பொறுப்பாளரை ஓரங்கட்டும் தலைமை!''கம்பெனியே நட்டத்துல ஓடும்போது, ஆடம்பர விழா எல்லாம் தேவையாடே...'' என, யாரிடமோ அலுத்தபடியே மொபைல் போனை, 'கட்' செய்தார் அண்ணாச்சி.சூடான மெது வடையை கடித்தபடியே, ''என்ன சமாச்சாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''போக்குவரத்து துறையில, மதுரை, கும்பகோணம், விழுப்புரம் கோட்டங்கள்ல இருந்த நிர்வாக இயக்குனர்களை சமீபத்துல

டீ கடை பெஞ்ச்


தி.மு.க., பொறுப்பாளரை ஓரங்கட்டும் தலைமை!''கம்பெனியே நட்டத்துல ஓடும்போது, ஆடம்பர விழா எல்லாம் தேவையாடே...'' என, யாரிடமோ அலுத்தபடியே மொபைல் போனை, 'கட்' செய்தார் அண்ணாச்சி.
சூடான மெது வடையை கடித்தபடியே, ''என்ன சமாச்சாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''போக்குவரத்து துறையில, மதுரை, கும்பகோணம், விழுப்புரம் கோட்டங்கள்ல இருந்த நிர்வாக இயக்குனர்களை சமீபத்துல இடமாற்றம் செஞ்சாவ... இந்த மூணு அதிகாரிகளுக்கும், திருச்சியில ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல்ல பிரிவுபச்சார விழா நடத்தியிருக்காவ வே...

''இதுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள்னு, 200க்கும் மேற்பட்டவங்க ஏகப்பட்ட வாகனங்கள்ல வந்து அமர்க்களப்படுத்தியிருக்காவ... ஏற்கனவே, கொரோனாவால கூட்டம் சேர்க்காதீயன்னு அரசாங்கம் கரடியா கத்திட்டு இருக்கு...

''அதுவும் இல்லாம, 'போக்குவரத்து கழகமே பயங்கர நட்டத்துல தள்ளாடிட்டு இருக்கிறப்ப, இப்படி ஆடம்பரமா பல லட்சங்களை செலவழிச்சு விழா நடத்தணுமா'ன்னு, கீழ்மட்ட ஊழியர்கள் வருத்தப்படுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எக்குதப்பா கேள்வி கேட்டு மடக்குவாங்கன்னு தான் விவாதத்தை தவிர்த்துட்டாங்க...'' என, தடம் மாறினார் அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''அ.தி.மு.க.,வினர், 'டிவி' விவாதங்கள்ல பங்கேற்க மாட்டாங்கன்னு, அந்தக் கட்சி தலைமை சமீபத்துல அறிவிச்சிருக்குல்ல... தி.மு.க., அரசு, தமிழக அரசின் நிதி நிலை பற்றி, வெள்ளை அறிக்கை தயார் பண்ணிட்டு இருக்குதுங்க...

''இதுல, அ.தி.மு.க., அரசின் பத்தாண்டு நிதி நிர்வாக குளறுபடிகளை புட்டு புட்டு வைக்கப் போறாங்களாம்... டிவி விவாதங்கள்ல கலந்துக்கிற எதிர்க்கட்சிகள், இது சம்பந்தமா அ.தி.மு.க., பிரமுகர்களை மடக்கி, மடக்கி கேள்வி கேட்பாங்க... அதுக்கு பதில் சொல்றது சிரமமா இருக்கும்னு கருதி தான், இப்பவே விவாதங்களை தவிர்த்துட்டாங்களாம்...'' என்றார் அந்தோணிசாமி.

''மாவட்ட பொறுப்பாளர் பதவி நீடிக்குமான்னு பட்டிமன்றம் நடத்திண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், கம்பைநல்லுாரைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் பஞ்., தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள்னு, 40க்கும் மேற்பட்டோரை, தி.மு.க.,வில் இணைக்கும் நிகழ்ச்சிக்காக, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி சென்னைக்கு அழைச்சுண்டு போயிருக்கார்... ஆனா, அங்க இணைப்பு நிகழ்ச்சிக்கு தலைமை அனுமதி தரலை ஓய்...

''இதனால, எல்லாரும் ஏமாற்றத்தோட ஊர் திரும்பிட்டா... ஏற்கனவே, இந்த மாவட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தி.மு.க.,வுல சேர்ந்த நிகழ்ச்சிக்கும் தடங்கம் சுப்ரமணியை தலைமை அழைக்கலை... 'இப்பவும் கண்டுக்காம இருக்கறதால, அவரது மாவட்ட பொறுப்பாளர் பதவி நீடிக்குமா, பழனியப்பன் கைக்கு மாறிடுமா'ன்னு, மாவட்ட தி.மு.க.,வினர் பட்டிமன்றம் நடத்திண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அந்தக் கட்சியில புதுசா வந்தவங்களுக்கு தானே என்னைக்கும் மரியாதை குடுப்பாவ...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X