பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜூலை 23, 1925திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில், 1884 அக்., 4ம் தேதி பிறந்தவர், சுப்பிரமணிய சிவா. அவரது குடும்பம், வறுமையில் வாடியது. இலவச உணவு கிடைக்கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று படித்தார். சிவகாசியில் காவல் துறை எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விலகினார்.தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். திருவனந்தபுரத்தில் இளைஞர்களை திரட்டி, 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற


இதே நாளில் அன்று


ஜூலை 23, 1925



திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில், 1884 அக்., 4ம் தேதி பிறந்தவர், சுப்பிரமணிய சிவா. அவரது குடும்பம், வறுமையில் வாடியது. இலவச உணவு கிடைக்கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று படித்தார். சிவகாசியில் காவல் துறை எழுத்தராக சேர்ந்து, மறுநாளே விலகினார்.தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். திருவனந்தபுரத்தில் இளைஞர்களை திரட்டி, 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். சென்னை, கோல்கட்டா, துாத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
'ஞானபானு, பிரபஞ்சமித்திரன்' போன்ற இதழ்களை துவக்கினார். 20-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார்.

வ.உ.சிதம்பரம், பாரதியாருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பல முறை சிறைவாசம் அனுபவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சிறையில் துயரம் சந்தித்தார்.துர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், 'பாரதபுரம்' என்ற ஆசிரமம் நிறுவினார். பாரதமாதா கோவில் கட்ட, ஊர் ஊராக சென்று நிதி திரட்டினார். ஆனால் அவரின் கனவு நிறைவேறவில்லை. 1925 ஜூலை- 23ம் தேதி தன் 41வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.'வீரமுரசு' சுப்பிரமணிய சிவா காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
26-ஜூலை-202107:58:38 IST Report Abuse
sankar என்றும் நிலைத்திருக்கும் உம்புகழ்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கப்பலோட்டிய தமிழன் படத்தில் TKS சுப்ரமணிய சிவாவாக நடித்தார் விடுதலைக்காக பாடுபட்ட சரித்திரங்களை கண்முன் நிறுத்திய காட்சிகள் கலைஞர்கள் அந்தந்த பாத்திரங்களாகவே மாறியிருந்தார் ஆனாலும் திசைமாறிய ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை நட்டக் கணக்குதான்
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
23-ஜூலை-202111:54:59 IST Report Abuse
.Dr.A.Joseph வீர வணக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X