பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,872 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,871 பேரும், பிற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,872 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,475 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 57 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 71 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,871 பேரும், பிற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,872 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,475 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் கடந்த 57 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 71 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 45,584 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,872 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,43,040 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,61,13,750 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,072 பேர் ஆண்கள், 800 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,85,871 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,57,131 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,475 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,83,676 ஆக உயர்ந்துள்ளது.

29 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,10 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,838 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X