அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகை நோக்கி காங்., கட்சியினர் பேரணி

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழக காங்கிரசார், கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை பேரணி நடத்தினர்.இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், உச்ச
 கவர்னர் மாளிகை நோக்கி காங்., கட்சியினர் பேரணி

சென்னை:போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழக காங்கிரசார், கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை பேரணி நடத்தினர்.

இஸ்ரேலை சேர்ந்த, 'பெகாசஸ்' நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி, நாடு முழுதும் கவர்னர் மாளிகை முன், பேரணி நடத்தப்படும் என, அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகேயிருந்து, தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமையில், கட்சியினர் கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை பேரணி சென்றனர். சிறிது துாரம் சென்ற கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அழகிரி பேசியதாவது:போன் ஒட்டு கேட்பு வாயிலாக, நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பா.ஜ., அரசு, ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குகிறது. பெகாசஸ் மென்பொருள் வாயிலாக, யாராலும் உளவு பார்க்க முடியும். ராணுவ தளபதி, சீன எல்லையில் உள்ள கமாண்டர் என்ன பேசுகிறார் என,இஸ்ரேலிய நிறுவனம் ஒட்டு கேட்டு, எதிரி நாடுகளிடம் தகவலை விற்கலாம்.

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் பேச வேண்டும். அதிகாரத்துக்கு பயந்து பல சிந்தனைவாதிகள், ஊடகத்தினர் வாய் திறக்க அஞ்சுகின்றனர். பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். கவர்னரிடம் மனு அளிக்கலாம் என, நினைத்தோம். ஆனால், தவறு செய்ததே அவர்கள் தான் என்பதால் போராட்டத்தை மட்டும் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagashivam - Thiruvallur,இந்தியா
23-ஜூலை-202112:47:36 IST Report Abuse
Nagashivam கோவிலில், தேரோட்டம், திருவிழாக்கள் நடத்தக்கூடாது, திருமணம், மற்றும் சுப நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் மட்டும் கலந்துகொள்ள வேண்டும், கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்ற அரசு 1000 பேருக்கு மேல் கூடி சமூக இடைவெளி இன்றி போராட்டம் நடத்த எப்படி அனுமதித்தார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X